குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
ADDED : மே 25, 2025 07:28 PM
காஞ்சிபுரம்:பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., துாரம் ஒருவழிச் சாலை இருந்தது. இச்சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், 2021ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலையாக, விரிவுப்படுத்தப்பட்டது.
ஏழு மீட்டர் சாலை அகலத்தில் இருந்து, 10.5 மீட்டராக மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலைக்கு, 44 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.
இதில், சோகண்டி - காந்துார் இடையே சாலையோரத்தில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனால், குடியிருப்புகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.