Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் ரூ.65 லட்சத்தில் தெருவிளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்

வாலாஜாபாதில் ரூ.65 லட்சத்தில் தெருவிளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்

வாலாஜாபாதில் ரூ.65 லட்சத்தில் தெருவிளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்

வாலாஜாபாதில் ரூ.65 லட்சத்தில் தெருவிளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்

ADDED : மே 24, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களின் பல பகுதிகளில், மின் கம்பங்களில் பொருத்தப்பட்டு இருந்த மின் விளக்குகள் பழுதாகி, சில நாட்களாக சரி, வர ஒளிராமல் இருந்தது.

குறிப்பாக, வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் ரயில்வே சாலையில் இருந்து, வெள்ளேரியம்மன் கோவில் வழியாக கிதிரிப்பேட்டை செல்லும் சாலை, மற்றும் போஜக்காரத் தெரு, சேர்க்காடு, தனலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதி தெருக்களில் நீண்ட நாட்களாக மின் விளக்குகள் சரி, வர ஒளிராமல் இருள் சூழ்ந்து இருந்ததால், அப்பகுதியினர் அச்சப்பட்டு வந்தனர்.

இரவு நேரங்களில் தெரு விளக்குகள் ஒளிராததால், வாகன ஓட்டிகளுக்கு சிரமம், திருட்டு பயம், விஷ ஜந்து நடமாட்டம் போன்ற பல்வேறு வகையிலான அச்சுறுத்தலால் குடியிருப்பினர் அவதிபட்டனர்.

இந்நிலையில், வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில் பழுதான மின் விளக்குகளுக்கு மாற்றாக, 'எல்.இ.டி.,' மின் விளக்குகள் பொருத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா கூறியதாவது:

வாலாஜாபாத் பேரூராட்சியில் மின்விளக்குகள் பொருத்த 65 லட்சம் ரூபாய் செலவில், 989 எல்.இ.டி., மின் விளக்குகள் அரசு சார்பில் வழங்ககப்பட்டுள்ளன. அவை தெரு வாரியாக மின் கம்பங்களில் பொருத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள 18 வார்டுகளில், தற்போது வரை 5 வார்டுகளில் பணி நிறைவு பெற்றுள்ளது. அடுத்த சில தினங்களில் ஒட்டுமொத்த வார்டுகளிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us