/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 22 வகுப்பறை கட்ட பள்ளியில் பூமி பூஜை 22 வகுப்பறை கட்ட பள்ளியில் பூமி பூஜை
22 வகுப்பறை கட்ட பள்ளியில் பூமி பூஜை
22 வகுப்பறை கட்ட பள்ளியில் பூமி பூஜை
22 வகுப்பறை கட்ட பள்ளியில் பூமி பூஜை
ADDED : மே 24, 2025 02:12 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அரசு மேல் நிலைப்பள்ளிக்கு, 6.87 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை நேற்று நடந்தது.
இந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய பள்ளி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த பள்ளிக்கு, இரண்டு ஆய்வகம், 22 வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவர் வசதியுடன்கூடிய புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.