/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்க புதிய அங்காடி திறப்பு மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்க புதிய அங்காடி திறப்பு
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்க புதிய அங்காடி திறப்பு
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்க புதிய அங்காடி திறப்பு
மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்க புதிய அங்காடி திறப்பு
ADDED : ஜூலை 05, 2025 01:27 AM

காஞ்சிபுரம்:மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகே புதிய அங்காடியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று திறந்து வைத்தார்.
தமிழகத்தில் உள்ள 100 முக்கிய சுற்றுலா தலங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய, 'மதி அங்காடி' என்ற பெயரில் கடைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகே, 10 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி நேற்று திறந்து வைத்தார்.
கைவினைப்பொருட்கள், சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், சணல் பைகள், பருத்தி சுடிதார் வகைகள், பட்டு சேலைகள் மற்றும் பருத்தி புடவைகள், காகிதக்கூழ் பொம்மைகள், களிமண் பொம்மைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.