/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் - தாம்பரம் பஸ் மீண்டும் இயக்கப்படுமா? உத்திரமேரூர் - தாம்பரம் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
உத்திரமேரூர் - தாம்பரம் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
உத்திரமேரூர் - தாம்பரம் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
உத்திரமேரூர் - தாம்பரம் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 12, 2025 11:34 PM
உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் இருந்து தாம்பரத்திற்கு சென்ற பேருந்தை மீண்டும் இயக்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் இருந்து, எலப்பாக்கத்திற்கு தடம் எண்77ஏஏ பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட, இப்பேருந்து தினமும், இரண்டு நடை எலப்பாக்கத்திற்கும், ஒரு நடை தாம்பரத்திற்கும் சென்று வருகிறது.
இந்நிலையில், இப்பேருந்து தினமும், இரவு 7:00 மணிக்கு தாம்பரத்திற்கு நடை செல்வது வழக்கம்.
ஆனால், ஆறு மாதமாக இப்பேருந்து தாம்பரத்திற்கு செல்லாமல், செங்கல்பட்டு வரை மட்டும் சென்று வருகிறது.
இதனால், உத்திரமேரூரில் இருந்து, பணி முடித்து இரவு தாம்பரத்திற்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அதை தொடர்ந்து, இப்பேருந்து இயக்கப்படாததால் பயணியர் செங்கல்பட்டுக்கு சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து பிடித்து தாம்பரம் செல்கின்றனர். இதனால், பயணியருக்கு நேரம் மற்றும் பண விரயம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, உத்திரமேரூரில் இருந்து, தாம்பரத்திற்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் இயக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்