/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சிலாம்பாக்கம் இருளர் குடியிருப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா? சிலாம்பாக்கம் இருளர் குடியிருப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
சிலாம்பாக்கம் இருளர் குடியிருப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
சிலாம்பாக்கம் இருளர் குடியிருப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
சிலாம்பாக்கம் இருளர் குடியிருப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுமா?
ADDED : செப் 21, 2025 01:07 AM

உத்திரமேரூர்:சிலாம்பாக்கம் இருளர் குடியிருப்பில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சிலாம்பாக்கம் கிராமத்தின் குளக்கரையில் 10 இருளர் குடும்பத்தினர் வசித்து வந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2022 -- 23 நிதி ஆண்டில், பழங்குடியினர் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 43.74 லட்சம் ரூபாய் செலவில், 10 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் இன்னமும் கான்கிரீட் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் தெரு சகதியாவதால், நடந்து செல்லவே சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து சிலாம் பாக்கம் இருளர் குடியிருப்பு மக்கள் கூறியதாவது:
சிலாம்பாக்கம் கிராமத்தில் வீடுகள் கட்டிக் கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை சாலை வசதி இல்லாமல் உள்ளது.
எனவே, சிலாம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில், கான்கிரீட் சாலை அமைக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.