/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கழிப்பறையை சீரமைக்க வெள்ளகுளத்தினர் வலியுறுத்தல்கழிப்பறையை சீரமைக்க வெள்ளகுளத்தினர் வலியுறுத்தல்
கழிப்பறையை சீரமைக்க வெள்ளகுளத்தினர் வலியுறுத்தல்
கழிப்பறையை சீரமைக்க வெள்ளகுளத்தினர் வலியுறுத்தல்
கழிப்பறையை சீரமைக்க வெள்ளகுளத்தினர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 13, 2025 02:00 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வெள்ளகுளம் பகுதியில், பராமரிப்பின்றி மூடி கிடக்கும் சமுதாய கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 10வது வார்டு வெள்ளகுளம் பகுதியில் வசிப்போருக்காக, 10 ஆண்டுகளுக்கு முன் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது. வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் சமுதாய கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், பாதாள சாக்கடை கழிப்பறை நிரம்பி விட்டது. இதனால், பகுதிவாசிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியவில்லை. இதனால், கழிப்பறை பயன்பாடின்றி மூடியே கிடக்கிறது.
இதனால், அப்பகுதி ஆண்கள் அப்பகுதியில் திறந்தவெளி பகுதியை இயற்கை உபாதை கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பெண்கள், இயற்கை உபாதை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, வெள்ளகுளத்தில் நிரம்பி வழியும் சமுதாய கழிப்பறையின் பாதாள சாக்கடை கழிப்பறை கழிவுநீரை அகற்றுவதோடு, சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.