/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பராமரிப்பின்றி உத்திரமேரூர் பூங்கா பராமரிப்பின்றி உத்திரமேரூர் பூங்கா
பராமரிப்பின்றி உத்திரமேரூர் பூங்கா
பராமரிப்பின்றி உத்திரமேரூர் பூங்கா
பராமரிப்பின்றி உத்திரமேரூர் பூங்கா
ADDED : மே 22, 2025 12:39 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், அருணாச்சல பிள்ளை சத்திரம் பகுதியில், பேரூராட்சி பூங்கா உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பூங்கா முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
இதிலிருந்த விளையாட்டு பொருட்கள், இருக்கைகள் பழுதடைந்து, சில பொருட்கள் திருடும் போய்விட்டன. தற்போது, பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன.
இங்கு, பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளன. தொடர்ந்து, பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் பெரியவர்கள், இளைஞர்கள் நடைபயிற்சி செய்ய முடியாத நிலை உள்ளது.
மேலும், சிறுவர்கள் விளையாட முடியாததால் அவர்களின் விளையாட்டு திறனும் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை, சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:
பேரூராட்சி பூங்காவில் சுற்றுச்சுவர், விளையாட்டு பொருட்கள், இருக்கைகள் ஆகியவை சேதமடைந்து உள்ளன. மழைநேரங்களில் மழைநீர் பூங்காவில் தேங்குவதை தவிர்க்க, பூங்காவின் தரை மட்டம் உயர்த்தப்பட்டு, சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.