/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி வரதர் கோவிலில் நாளை உறியடி உத்சவம் காஞ்சி வரதர் கோவிலில் நாளை உறியடி உத்சவம்
காஞ்சி வரதர் கோவிலில் நாளை உறியடி உத்சவம்
காஞ்சி வரதர் கோவிலில் நாளை உறியடி உத்சவம்
காஞ்சி வரதர் கோவிலில் நாளை உறியடி உத்சவம்
ADDED : செப் 14, 2025 10:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாளை உறியடி உத்சவம் நடக்கிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, இன்று, மாலை 6:30 மணிக்கு, மூலவர் சன்னதியில் இருந்து, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார், கண்ணனுடன் கண்ணாடி அறையில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து திருமஞ்சனம் நடக்கிறது.
நாளை, காலை 7:30 மணிக்கு கண்ணன் சேஷ வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மாலை 5:30 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் கண்ணனுடன் மாட வீதி புறப்பாடு நடக்கிறது. இதில், சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன் உறியடி உத்சவம் நடக்கிறது.
தொடர்ந்து, குறுக்கு தெரு, அண்ணா தெரு, வடக்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி வழியாக அஸ்தகிரி தெருவிற்கு வரதராஜ பெருமாள் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி முன்னிலையில் சறுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, சுவாமி அங்கிருந்து புறப்பாடாகி ஆனை கட்டி தெரு, சன்னிதி தெரு வழியாக கோவில் வந்தடைவார்.