/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஓய்வுபெற்ற வங்கி பணியாளர்களுக்கு வட்டியுடன் பணிக்கொடை வழங்க மனு ஓய்வுபெற்ற வங்கி பணியாளர்களுக்கு வட்டியுடன் பணிக்கொடை வழங்க மனு
ஓய்வுபெற்ற வங்கி பணியாளர்களுக்கு வட்டியுடன் பணிக்கொடை வழங்க மனு
ஓய்வுபெற்ற வங்கி பணியாளர்களுக்கு வட்டியுடன் பணிக்கொடை வழங்க மனு
ஓய்வுபெற்ற வங்கி பணியாளர்களுக்கு வட்டியுடன் பணிக்கொடை வழங்க மனு
ADDED : செப் 14, 2025 10:58 PM
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உச்சவரம்பின்றி பணிக்கொடை வழங்கவும், காலதாமதத்திற்கு 9 சதவீத வட்டி வழங்க கோரி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு சிப்பந்திகள் சங்க பொது செயலர் தேவராசன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம், 1997 ஜூலை 1 முதல், 2018 ஜன., 30 வரை பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உச்சவரம்பின்றி பணிக்கொடையும், காலதாமதத்திற்கு வட்டியாக பல்வேறு நீதிமன்றங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு 9 சதவீத வட்டி வழங்குவது என, வங்கியின் 106வது பேரவை கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.
வங்கியின் நிதிநிலைமை நல்ல நிலையில் உள்ளதால் உச்சவரம்பின்றி வட்டியுடன் வழங்கிட அனுமதி வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இன்னும் அனுமதி பெறாமல் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது.
எனவே, தமிழக முதல்வர், எங்கள் கோரிக்கை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.