/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மழைநீர் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்மழைநீர் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மழைநீர் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மழைநீர் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
மழைநீர் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 05, 2024 10:05 PM

ஏனாத்துார்:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துாரில் இருந்து, வையாவூர் செல்லும் சாலையோரம் கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில், 2.5 மீட்டர் நீளத்திற்கு மேல், கான்கிரீட் கட்டுமான பணி விடுபட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் மண் அரிப்பு காரணமாக சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
போதுமான வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விடுபட்ட கான்கிரீட் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.