/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 06, 2025 02:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, எஸ்.எஸ்.கே., நகரில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரில் உள்ள பிரதான சாலை, சேதமடைந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் சகதியாக மாறியுள்ளது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சகதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, எஸ்.எஸ்.கே., நகரில், சேதமடைந்த சாலையை சீரமைக்க கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.