ADDED : செப் 18, 2025 03:29 AM
உத்திரமேரூர்:காஞ்சிபுரம் பா.ம.க., சார்பில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நகர செயலர் சிவகுமார் தலைமையில் உத்திரமேரூரில் நேற்று நடந்தது.
மாவட்ட செயலர் ஸ்ரீதர், மாநில மகளிர் சங்க செயலர் சரளா முன்னிலை வகித்தனர். மாநில வன்னியர் சங்க செயலர் ஆறுமுகம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக, பா.ம.க., வினர் அம்பேத்கர் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து, பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 21 பேரின் உருவ படத்திற்கு, அஞ்சலி செலுத்தினர்.