ADDED : மே 27, 2025 01:18 AM
உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, அம்மையப்பநல்லூர் கிராமத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு நுண்ணுயிர் பாசன கருவிகள் பராமரிப்பு குறித்த பயிற்சி நேற்று நடந்தது.
அதில், விவசாயிகளை விளை நிலங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று, நுண்ணுயிர் பாசன குழாய்களில் படியும் உப்பு படிவங்களை, அமிலம் கொண்டு சுத்தம் செய்யும் முறை பற்றி விளக்கப்பட்டது.
மேலும், மணல் வடிகட்டி, தட்டு வடிகட்டி, திரை வடிகட்டி ஆகிய நுண்ணுயிர் பாசன கருவிகளை பராமரிப்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.