/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம் குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் வலுவிழக்கும் அபாயம்
ADDED : செப் 22, 2025 12:49 AM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் தாயார் குளம் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளால் சுவர் வலுவிழந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. செடிகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், வேகவதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள தாயார் குளம், அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், இக் குளத்தின் சுற்றுச்சுவரில் ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன.
இச்செடிகளின் வேர்களால் ஒரு சில இடங்களில் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நாளடையில் முற்றிலும் வலுவிழந்து சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலை உள்ளது.
எனவே, தாயார் குளம் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள செடிகளை வேருடன் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.