/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருமால்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பால பணி இழுபறி திருமால்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பால பணி இழுபறி
திருமால்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பால பணி இழுபறி
திருமால்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பால பணி இழுபறி
திருமால்பூர் ரயில் நிலையத்தில் நடை மேம்பால பணி இழுபறி
ADDED : செப் 22, 2025 12:50 AM

காஞ்சிபுரம்:திருமால்பூர் ரயில் நிலையத்தில், நடை மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி ஓராண்டாகியும் இன்னும் முடியாமல் இழுபறியாக உள்ளது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் வரை மின்சார ரயில் பாதை உள்ளது.
வாலாஜாபாத், திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களிலும், ரயில்களுக்கான மாற்றுப் பாதை உள்ளது.
ஒரு நடைமேடையில் இருந்து, மற்றொரு நடைமேடைக்கு கடந்து செல்ல முடியாத நிலை உள்ளதால், நடை மேம்பாலம் வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பயணியரின் கோரிக்கையை ஏற்று, ரயில்வே நிர்வாகம், வாலாஜாபாத், திருமால்பூர் ஆகிய இரு ரயில் நிலையங்களில் நடைமேம்பால கட்டுமான பணிகளை, கடந்த ஆண்டு ஜூனில் துவக்கியது.
இரும்பிலான ராட்சத இரும்பு துாண்கள் மீது, மேல் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஓராண்டுகளை கடந்தும் பணி இன்னும் இழுபறியாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'நடை மேம்பாலம் அமைக்கும் பணியை வேகப்படுத்தி உள்ளோம். வரும் டிசம்பருக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்' என்றனர்.