/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கோரிக்கை வலியூறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்கோரிக்கை வலியூறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்
கோரிக்கை வலியூறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்
கோரிக்கை வலியூறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்
கோரிக்கை வலியூறுத்தி ஓட்டுனர்கள் போராட்டம்
ADDED : ஜன 24, 2024 10:49 PM

செங்கல்பட்டு,:தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பில், பரனுார் சுங்கச்சாவடி அருகில், பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த 'ஹிட் அண்டு ரன்' புதிய சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்கள், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி மறியலிலும் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஓட்டுனர்களிம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.