/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஓரிக்கை அரசு நகர் பூங்கா சீரமைத்து குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி முடிவு ஓரிக்கை அரசு நகர் பூங்கா சீரமைத்து குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி முடிவு
ஓரிக்கை அரசு நகர் பூங்கா சீரமைத்து குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி முடிவு
ஓரிக்கை அரசு நகர் பூங்கா சீரமைத்து குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி முடிவு
ஓரிக்கை அரசு நகர் பூங்கா சீரமைத்து குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி முடிவு
ADDED : மே 21, 2025 01:55 AM

காஞ்சிபுரம்:மத்திய அரசின், 'அம்ரூட்' திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஓரிக்கை அரசு நகரில், 2017 - 2018ல் பூங்கா கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பூங்காவில், இருக்கை, கழிப்பறை வசதி, இரவில் ஒளிரும் மின்விளக்கு, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்களுக்கான சீசா, சறுக்கு, ஊஞ்சல் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
அரசு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பூங்காவை பயன்படுத்தி வந்தனர். 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது மூடப்பட்ட பூங்காவை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் பூங்கா சீரழிந்தது. எனவே, இப்பூங்காவை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில், பூங்காவில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, பூங்காவில் மண்டிகிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டன. பழுதடைந்த விளையாட்டு உபகரணம் அகற்றப்பட்டு, புதிதாக பூங்கா அமைப்பதற்காக முதற்கட்ட பணி துவங்கியுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் 48வது வார்டு தி.மு.க., - கவுன்சிலரும், மாநகராட்சி பணிக் குழு தலைவருமான கார்த்தி கூறியதாவது:
ஓரிக்கை அரசு நகர் பூங்கா வளாகத்தில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி புதிதாக கட்டப்பட உள்ளது.
மேலும்,, 10 லட்சம் ரூபாய் செலவில், பூங்காவில் முன் இருந்ததைப் போன்று, விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சிக்கான நடைபாதை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பூங்காவும் புதிதாக அமைக்கப்பட உள்ளது,
இவ்வாறு அவர் கூறினார்.