ADDED : ஜன 06, 2024 12:15 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், எண்ணெய்க்கார தெருவைச் சேர்ந்தவர் யுவஸ்ரீ, 19. கல்லுாரி மாணவி.
ஒரு வாரத்துக்கு முன் இவருக்கு, கொரோனா தொற்று அறிகுறி இருந்தது.
காஞ்சிபுரம் அருகேயுள்ள காரைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இரு நாட்களுக்கு முன் வீடு திரும்பினார்.
இந்நிலையில், வீட்டில் இருந்த யுவஸ்ரீ, நேற்று முன்தினம் திடீரென மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், 'டிசம்பர் மாத இறுதியில், கொரோனா அறிகுறிகள் இருந்ததாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் மட்டுமல்லாமல், உடலில் மேலும் சில பாதிப்புகள் இருந்துள்ளன' என்றார்.