/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மாநில வாள் வீச்சு போட்டி சென்னை அணி அறிவிப்புமாநில வாள் வீச்சு போட்டி சென்னை அணி அறிவிப்பு
மாநில வாள் வீச்சு போட்டி சென்னை அணி அறிவிப்பு
மாநில வாள் வீச்சு போட்டி சென்னை அணி அறிவிப்பு
மாநில வாள் வீச்சு போட்டி சென்னை அணி அறிவிப்பு
ADDED : பிப் 23, 2024 11:01 PM
சென்னை:தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் சார்பில், மாநில சப் - ஜூனியருக்கான வாள்வீச்சு போட்டி, காஞ்சிபுரம், காரைப்பேட்டை பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லுாரியில், மார்ச் 2ம் தேதி நடக்கிறது.
பாயல், எப்பி மற்றும் சேபர் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட மாநில முழுதும் இருந்து ஏராளமான அணிகள் பங்கேற்கின்றன. இதில், சென்னை மாவட்டம் சார்பில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையரின் பெயர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.
அதில், சிறுவர்களில் 'பாயல்' பிரிவில் ஸ்ரீவட்சன் ஆர்யா, தானிஷ்; 'எப்பி' பிரிவில் சாரதி, கண்ணதாசன், விஸ்வா; 'சேபர்' பிரிவில் அஸ்வின், சாக் ஷன், அன்வித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல், சிறுமியரில் பாயல் பிரிவில் ஜோசிதாஸ்ரீ, சோபியா, கரோலின், ஆர்ஷிதா, பிரசன்னா; எப்பி பிரிவில், சுபாஷினி, சுபிக் ஷா, தியா; சேபர் பிரிவில் வந்தனாஸ்ரீ மற்றும் ரேச்சல் ஆகியோர் உள்ளனர்.
இந்த தகவலை, சென்னை மாவட்ட வாள் வீச்சு விளையாட்டு சங்கத்தின் செயலர் கருணாமூத்தி, பெருளாளர் நாகப்பன் தெரிவித்தனர்.