/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திருமுடிவாக்கத்தில் ரூ.19 கோடியில் அமையுது பணியாளர் தங்கும் விடுதி திருமுடிவாக்கத்தில் ரூ.19 கோடியில் அமையுது பணியாளர் தங்கும் விடுதி
திருமுடிவாக்கத்தில் ரூ.19 கோடியில் அமையுது பணியாளர் தங்கும் விடுதி
திருமுடிவாக்கத்தில் ரூ.19 கோடியில் அமையுது பணியாளர் தங்கும் விடுதி
திருமுடிவாக்கத்தில் ரூ.19 கோடியில் அமையுது பணியாளர் தங்கும் விடுதி
ADDED : ஜூன் 27, 2025 11:11 PM
சென்னை:திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில், 19 கோடி ரூபாயில் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா, திருமுடிவாக்கத்தில், 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு தொழிற்பேட்டை உள்ளது.
அங்கு, 650க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும், அதன் அருகில் உள்ள மகளிர் தொழிற்பேட்டையில், 44 நிறுவனங்களும் செயல்படுகின்றன.
இரு தொழிற்பேட்டைகளை சுற்றி, 1,000க்கும் மேற்பட்ட சிறு, குறுதொழில் நிறுவனங்கள் உள்ளன.
திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றி, 25,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில், 5,000 பேர் மற்ற மாவட்டங்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தங்குமிடத்திற்கு சிரமப்படுவதுடன், அதிக தொகை செலவழிக்கின்றனர்.
எனவே, தொழிலாளர் தங்கும் விடுதி அமைக்குமாறு அரசுக்கு, தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, 19.32 கோடி ரூபாயில், மூன்று தளங்களுடன் தொழிலாளர் தங்கும் விடுதியை கட்டுவதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 'சிட்கோ' டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம், 500க்கும் மேற்பட்டோர் பயன்பெற முடியும்.
இதுகுறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:
திருமுடிவாக்கத்தில் தொழிலாளர் தங்கும் விடுதி அமைப்பதால், வெளியூரில் இருந்து வந்து தங்கியுள்ள தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
அதேபோல், தொழிற்பேட்டை வளாகத்தில், ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற்பயிற்சி நிலையத்தை அமைத்தால், தொழிலாளர்கள் தொடர்ந்து திறன் மேம்பாட்டு பயிற்சி பெற வசதியாக இருக்கும். தொழிலாளர் தங்கும் விடுதி போல், ஐ.டி.ஐ.,யையும் அரசு விரைந்து அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.