/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் பென்னலுார் சாலையில் விபத்து அபாயம் தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் பென்னலுார் சாலையில் விபத்து அபாயம்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் பென்னலுார் சாலையில் விபத்து அபாயம்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் பென்னலுார் சாலையில் விபத்து அபாயம்
தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலம் பென்னலுார் சாலையில் விபத்து அபாயம்
ADDED : செப் 23, 2025 12:26 AM

ஸ்ரீபெரும்புதுார்:பென்னலுார் சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்பு சுவர் இல்லாததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை தேவைக்காகவும், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்ல, பென்னலுார் பிரதான சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலைகளை இணைக்கும் சாலையாக விளங்கும் பென்னலுார் பிரதான சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், பென்னலுார் ராஜலட்சுமி மருத்துவக்கல்லுாரி அருகே உள்ள ஏரி உபரிநீர் கால்வாய் குறுக்கே சிறுபாலம் அமைந்துள்ளது.
சிறுபாலத்தின் இருப் புறங்களிலும் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள, எதிரே வரும் வரும் வாகனங் களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சிறு பாலத்தில் இருந்து தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.