/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குளக்கரை நடைபாதையை சீரமைக்க கோரிக்கை குளக்கரை நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
குளக்கரை நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
குளக்கரை நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
குளக்கரை நடைபாதையை சீரமைக்க கோரிக்கை
ADDED : செப் 23, 2025 12:26 AM

காஞ்சிபுரம்;சர்வதீர்த்த குளக்கரையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, நடைபாதையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள சர்வதீர்த்த குளம், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த 2011ல், 45 லட்சம் ரூபாய் மதிப்பில், குளம் துார்வாரப்பட்டு, சுற்றி தடுப்பு வேலி அமைத்து, டைல்ஸ் பதிக்கப்பட்டு நடைபயிற்சிக்கான நடைபாதை அமைக்கப்பட்டது.
குளத்தை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்கள், தினமும் காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபாதையில் செடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் அதில் தஞ்சமடைந்து உள்ளன.
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, சர்வதீர்த்த குளக்கரை நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, நடைபாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.