ADDED : பிப் 10, 2024 11:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியை சுகுணாதேவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல், மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
முன்னதாக அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், பள்ளி மாணவியர் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சிறப்பான இடங்களை பெற்ற மாணவியர் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.