/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மஹோத்சவம் ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மஹோத்சவம்
ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மஹோத்சவம்
ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மஹோத்சவம்
ராஜகீழ்பாக்கம் காஞ்சி வித்யா மந்திரில் சாரதா நவராத்திரி மஹோத்சவம்
ADDED : செப் 24, 2025 10:41 PM
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரம் அடுத்த ராஜ கீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் வளாகத்தில், சாரதா நவராத்திரி மஹோத்சவத்தை நடத்தி வருகின்றனர்.
நவராத்திரி விழாவையொட்டி வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் திரிகால பூஜையும், காலை மற்றும் இரவில், நவாவர்ண பூஜையும் நடைபெறுகிறது. நவராத்திரிக்காக நிறுவப்பட்டிருக்கும் விசேஷ யாக சாலையில் ஸ்ரீவித்யா ஹோமம், ரிக் சம்ஹிதா ஹோமம் மற்றும் சண்டி ஹோமம் தினமும் நடைபெறுகிறது.
இது தவிர ஸஹஸ்ர சண்டி ஹோமமும், தினமும் அம்பாள் சம்பந்தமான காம்யார்த்த ஹோமங்களு ம் நடைபெறுகின்றன.
ராஜகீழ்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திரில், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின்படி ஒரு வித்யா சாலையும், ஒரு வேத பாட சாலையும் நடை பெறுகிறது.
பாடசாலை வித்யார்த்திகள் பள்ளிகள் சேர்க்கப்பட்டு கல்வியும் கற்கிறார்கள். இந்த வளாகத்தில் கணபதி கோவில், காமாட்சி அம்மன் கோவில், சிவன் கோவில் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடை பெறுகின்றன.
வித்யார்த்திகளுக்கும், பொதுமக்களுக்கும் விசேஷ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, ராஜகீழ்பாக்கம் காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் தலைவர் டாக்டர் வி.சங்கர் தெரிவித்துள்ளார்.