/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்
ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்
ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்
ஒரகடம் மேம்பாலத்தின் மீது மண் குவியல் அகற்றம்
ADDED : ஜூலை 04, 2025 01:18 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் மேம்பாலத்தின் இருபுறமும் குவிந்துள்ள மண் குவியலை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரகடத்தில் மேம்பாலம் உள்ளது. வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும், தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த மேம்பாலத்தின் இருபுறங்களிலும், அதிக அளவு மண் குவிந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விபத்தில் சிக்கி வந்தனர்.
இதனால், மேம்பாலத்தின் மீது தேக்கமடைந்துள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலத்தின் மீது இருந்த மண் குவியலை அகற்றி சீரமைத்தனர்.