/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குடிநீர் ' வால்வு ' தொட்டியில் தேங்கும் மழைநீர் ' ஏடிஸ் ' புழுக்களால் டெங்கு பரவும் அபாயம் குடிநீர் ' வால்வு ' தொட்டியில் தேங்கும் மழைநீர் ' ஏடிஸ் ' புழுக்களால் டெங்கு பரவும் அபாயம்
குடிநீர் ' வால்வு ' தொட்டியில் தேங்கும் மழைநீர் ' ஏடிஸ் ' புழுக்களால் டெங்கு பரவும் அபாயம்
குடிநீர் ' வால்வு ' தொட்டியில் தேங்கும் மழைநீர் ' ஏடிஸ் ' புழுக்களால் டெங்கு பரவும் அபாயம்
குடிநீர் ' வால்வு ' தொட்டியில் தேங்கும் மழைநீர் ' ஏடிஸ் ' புழுக்களால் டெங்கு பரவும் அபாயம்
ADDED : ஜூன் 14, 2025 01:17 AM

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பகுதியில், வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க திறந்துவிடும் 'கேட்வால்வு' தொட்டியில் தேங்கும் மழைநீரில் நெளியும் புழுக்களால், 'ஏடிஸ்' கொசு உருவாகி காஞ்சிபுரத்தில் டெங்கு பரவும் சூழல் உள்ளது.
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்வதற்காக செங்கழுநீரோடை வீதியில், கேட் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி குடிநீர் பிரிவு ஊழியர்கள், கேட்வால்வு தொட்டியை முறையாக மூடாததால், தொட்டியில் மழைநீர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பை கழிவு உள்ளது.
மேலும், தொட்டியில் தேங்கியுள்ள மழைநீரில் கொசு புழுக்கள் நெளிகின்றன.
இதனால், மழைநீரில் 'ஏடிஸ்' கொசு உருவாகும் நிலை உள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் டெங்கு பரவும் சூழல் உள்ளது.
மேலும், 'கேட்வால்வு' பகுதியில் ஓட்டை ஏதேனும் இருந்தால், அவ்ழியாக புழுக்கள் மற்றும் அசுத்தமான நீர், குடிநீரில் கலந்தால், குடிநீர் மாசடையும் சூழல் உள்ளது.
இதனால் குடிநீரை பயன்படுத்துவோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, குடிநீர் திறந்துவிடும் 'கேட்வால்வு' தொட்டியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், தொட்டியை முறையாக பராமரிக்கவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
பைப் உடைந்து நீர் கசிவு
வாலாஜாபாத் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலை ஓரம் குடிநீர் பைப் உடைந்து நீர் கசிவதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாலாஜாபாத் பேரூராட்சி மக்களுக்கான குடிநீர் தேவைக்கு அப்பகுதி பாலாற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
ஆழ்த்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீரை, நிலத்தின் கீழ் புதைத்த குடிநீர் பைப் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு அண்ணா அரசினர் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் பைப் உடைபட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலை ஓரத்தில் குடிநீர் கசிந்து வழிகிறது.
இதனால், அப்பகுதி சாலையோரம் சகதியாவதோடு, குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே, வாலாஜாபாத் சாலை ஓரத்தில் குடிநீர் பைப் உடைந்து குடிநீர் கசிவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.