/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜூன் 14, 2025 01:13 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே பனப்பாக்கத்தில் இருந்து பிரிந்து செல்லும் வட்டம்பாக்கம் சாலை வழியா ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
உமையாள்பரணச்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, வளையக்கரணை உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை வழியாக ஒரகடம், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளங்களாக மாறியுள்ளன.
இதனால், இரு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வட்டம்பாக்கம் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.