/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நீதிமன்ற கட்டுமான பணி ஜனவரிக்குள் முடிக்க பொதுப்பணி துறை திட்டம் நீதிமன்ற கட்டுமான பணி ஜனவரிக்குள் முடிக்க பொதுப்பணி துறை திட்டம்
நீதிமன்ற கட்டுமான பணி ஜனவரிக்குள் முடிக்க பொதுப்பணி துறை திட்டம்
நீதிமன்ற கட்டுமான பணி ஜனவரிக்குள் முடிக்க பொதுப்பணி துறை திட்டம்
நீதிமன்ற கட்டுமான பணி ஜனவரிக்குள் முடிக்க பொதுப்பணி துறை திட்டம்
ADDED : செப் 14, 2025 11:45 PM

உத்திரமேரூர்;உத்திரமேரூர் நீதிமன்ற கட்டட கட்டுமான பணிகளை வரும் ஜனவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
உத்திரமேரூரில் உள்ள எல்.எண்டத்துார் சாலையில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றம், 20 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நீதிமன்றத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 -- 25ம் நிதி ஆண்டில், மத்திய அரசின் நீதித்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் திட்டத்தின் கீழ், 22.61 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, உத்திரமேரூரில் உள்ள வேடபாளையம் பகுதியில், புதிய நீதிமன்ற கட்டடம் கட்டும் பணி மார்ச் மாதம் துவங்கப்பட்டது. அதில், இரண்டு தளங்களாக நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உத்திரமேரூர் நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டட கட்டுமான பணிகள், தற்போது 50 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. வரும் ஜனவரி மாதத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.