/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் 304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
304 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்
ADDED : செப் 15, 2025 09:58 PM
உத்திரமேரூர்;உத்திரமேரூரில், 304 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா நேற்று வழங்கப்பட்டது.
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் , உத்திரமேரூர் வருவாய் துறை சார்பில், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆஷிக் அலி தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியக் குழு சேர்மன் ஹேமலதா, தாசில்தார் சுந்தர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
அதில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, 304 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா உட்பட பலர் பங்கேற்றனர்.