/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தங்க முலாம் நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர் தங்க முலாம் நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர்
தங்க முலாம் நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர்
தங்க முலாம் நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர்
தங்க முலாம் நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர்
ADDED : ஜன 11, 2024 12:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் கோவிலில், மூலவர் சித்தீஸ்வரர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து புதிதாக செய்து தங்க முலாம் பூசப்பட்ட நந்தி வாகனத்தில், அம்பிகையுடன் பிரதோஷ நாயகர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவில் பரம்பரை தர்மகத்தா பாலசுப்பிரமணிய குருக்கள் மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டில் புதிய தங்க முலாம் பூசப்பட்ட நந்தி வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.