Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பிரதமர் மோடியுடன் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்திப்பு

ADDED : செப் 11, 2025 12:34 PM


Google News
Latest Tamil News
வாரணாசி: உத்தரபிரதேசம் சென்றுள்ள பிரதமர் மோடியுடன், மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்து பேசினார்.

மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக உத்தரபிரதேசம் வந்த பிரதமர் மோடியை கவர்னர் அனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பின்னர், வாரணாசிக்கு கார் மூலம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இரு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, வாரணாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடியை மொரீசியஸ் நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இன்று சந்தித்து பேசினார். இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். மாலை 4.15 மணிக்கு தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார். அதன்பிறகு, மாலை 5 மணியளவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us