/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி சீட்டு கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி சீட்டு
கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி சீட்டு
கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி சீட்டு
கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி சீட்டு
ADDED : ஜூன் 13, 2025 07:50 PM
காஞ்சிபுரம்,:ஜல்லி, கற்கள் ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகளின்படி இருப்பு கிடங்கு அமைத்து சாதாரண வகை கற்கள், ஜல்லி மற்றும் செயற்கை மணல் எம்.சாண்ட் கொண்டுச்செல்ல தற்போது வரை காஞ்சிபுரம் மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நேரில் இடைகடவு சீட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 12 ம் தேதி முதல், கற்கள், ஜல்லி மற்றும் செயற்கை மணல் எம்.சாண்ட் ஆகியவற்றை கொண்டுச்செல்ல http://mines.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் நடைச்சீட்டுகளின் அடிப்படையில் இடைகடவு சீட்டு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இடைகடவு சீட்டுகள் இணையதள முறையில் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், வாகனங்களில் ஏற்றி செல்லப்படும் அனைத்து கனிமங்களும் முழுமையாக கண்காணிக்கப்படும்.
உரிய மாற்று நடைச்சீட்டு இல்லாமல் ஜல்லி கிரஷர் ஆலைகள், கனிம சேமிப்பு இருப்புக் கிடங்குகளில் இருந்து கனிமங்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது