/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/உத்திரமேரூர் பஸ் நிலைய கழிப்பறை சீரமைப்பு பணியால் பயணியர் அவதிஉத்திரமேரூர் பஸ் நிலைய கழிப்பறை சீரமைப்பு பணியால் பயணியர் அவதி
உத்திரமேரூர் பஸ் நிலைய கழிப்பறை சீரமைப்பு பணியால் பயணியர் அவதி
உத்திரமேரூர் பஸ் நிலைய கழிப்பறை சீரமைப்பு பணியால் பயணியர் அவதி
உத்திரமேரூர் பஸ் நிலைய கழிப்பறை சீரமைப்பு பணியால் பயணியர் அவதி
ADDED : ஜூன் 15, 2025 01:25 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலைய கழிப்பறை பராமரிப்பு பணியால், பயணியர் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் அருகே, பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.
இப்பேருந்து நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பயணியர் கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறையை பேருந்துக்காக வரும் பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 40 ஆண்டுக்கு முன் இந்த கழிப்பறையின் நுழைவாயில் முன் தொட்டி அமைக்கப்பட்டு, அதன்மீது கான்கிரீட் சிலாப் போடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தின இரவு கழிப்பறை தொட்டியின் கான்கிரீட் சிலாப் உடைந்ததால், கழிப்பறை செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கழிப்பறை தொட்டி சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. இதனால், பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்த பெண்கள், முதியோர் ஆகியோர் இயற்கை உபாதையை கழிக்க, கழிப்பறை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த பணிகள் முடிய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே, பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மொபைல் கழிப்பறை அமைத்து தர, பேரூராட்சி நிர்வாகத்திற்கு பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.