/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க வலியுறுத்தல் சாலையில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
சாலையில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
சாலையில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
சாலையில் மழைநீர் தேக்கம் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2025 01:27 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கே.டி.எஸ்., மணி தெருவில், மழைநீர் தேங்காத வகையில், முறையான வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 19வது வார்டு, மாமல்லன் கே.டி.எஸ். மணி தெரு, வழியாக சண்முகா நகர், மின் நகர், மாமல்லன் நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதியினர் சென்று வருகின்றனர்.இத்தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள், வங்கி, பள்ளி மற்றும் பல்வேறு வணிக நிறுவனம் அமைந்துள்ளன.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், மழைநீர் வெளியேற முறையான வடிகால்வாய் இல்லாததால், சாலையில் குளம்போல தேங்கி சகதியாக மாறியதோடு, அருகில் உள்ள அம்பேத்கர் நகர் செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
பலத்த மழை பெய்தால், இப்பகுதியில் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது.
மழைநீர் தேங்கியுள்ள பகுதியில், சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மாமல்லன் நகர் கே.டி.எஸ்., மணி தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், மழைநீர் தேங்காமல் இருக்க, முறையான வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.