/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பேருந்து நிறுத்தம் அருகே தேங்கும் மழைநீர், குப்பையால் பயணியர் அவதி பேருந்து நிறுத்தம் அருகே தேங்கும் மழைநீர், குப்பையால் பயணியர் அவதி
பேருந்து நிறுத்தம் அருகே தேங்கும் மழைநீர், குப்பையால் பயணியர் அவதி
பேருந்து நிறுத்தம் அருகே தேங்கும் மழைநீர், குப்பையால் பயணியர் அவதி
பேருந்து நிறுத்தம் அருகே தேங்கும் மழைநீர், குப்பையால் பயணியர் அவதி
ADDED : செப் 12, 2025 02:24 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், வி.ஆர்.பி., சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே, காலிமனையில் தேங்கும் மழைநீர் மற்றும் அதில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் வி.ஆர்.பி., சத்திரத்தில், பைபாஸ் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், வி.ஆர்.பி., சத்திரம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள காலி மனையில் குட்டை போல மழைநீர் தேங்கி உள்ளது.
பல மாதங்களாக தேங்கியுள்ள மழைநீர், நாளடைவில் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், அருகே உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, பேருந்து நிறுத்தம் அருகே கொட்டி வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பயணியர் அவதிபட்டு வருகின்றனர்.
எனவே, வி.ஆர்.பி., சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே, காலி மனையில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்தி, குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.