/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாத்துாரில் அரைகுறை வடிகால்வாய் பணி மாத்துாரில் அரைகுறை வடிகால்வாய் பணி
மாத்துாரில் அரைகுறை வடிகால்வாய் பணி
மாத்துாரில் அரைகுறை வடிகால்வாய் பணி
மாத்துாரில் அரைகுறை வடிகால்வாய் பணி
ADDED : ஜூன் 07, 2025 12:54 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாத்துார் ஊராட்சியில், 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள சக்தி மூங்கிலம்மன் கோவில் தெருவில், ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு இந்த தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், வடிகால்வாய் பணி முழுமையாக நிறைவு பெறாமல், அரைகுறையாக விடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், அரைகுறையாக விட்பட்டுள்ள வடிகால்வாயில் அப்பகுதியின் குப்பை கொட்டி வருவதால், மழைநீர் வடிகால்வாய் துார்ந்து போகும் நிலை உள்ளது.
எனவே, எதிர் வரும் பருவ மழைக்குள், விடுபட்ட வடிகால்வாய் பணியினை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.