/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பஞ்., தலைவர் - சேர்மன் பூமி பூஜையில் 'லடாய்'பஞ்., தலைவர் - சேர்மன் பூமி பூஜையில் 'லடாய்'
பஞ்., தலைவர் - சேர்மன் பூமி பூஜையில் 'லடாய்'
பஞ்., தலைவர் - சேர்மன் பூமி பூஜையில் 'லடாய்'
பஞ்., தலைவர் - சேர்மன் பூமி பூஜையில் 'லடாய்'
ADDED : பிப் 06, 2024 04:24 AM
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் ஊராட்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு, சமீபத்தில் பூமி பூஜை போடும் பணி நடந்தது.
இதில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் வரதன் என்பவர், நான் கூறும் இடத்தில் ரேஷன் கடை கட்டடம் கட்ட வேண்டும் என, காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசனிடம் கூறியுள்ளார்.
அதையடுத்து, அதே ஊரில் வசித்து வரும், வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரனுக்கும், ஏனாத்துார் ஊராட்சி தலைவர் வரதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது, எங்க நிதி, நாங்க எங்கு வேண்டுமானாலும் கட்டுவோம். நீ எங்கு சென்று பார்த்துக் கொள்கிறாயோ பார்த்துக்கொள் என, தேவேந்திரன், ஊராட்சி தலைவரை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., அரசியல் விமர்சகர்கள் இடையே, முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.