/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/என்.எஸ்.எஸ்., முகாமில் கண் மருத்துவ பரிசோதனைஎன்.எஸ்.எஸ்., முகாமில் கண் மருத்துவ பரிசோதனை
என்.எஸ்.எஸ்., முகாமில் கண் மருத்துவ பரிசோதனை
என்.எஸ்.எஸ்., முகாமில் கண் மருத்துவ பரிசோதனை
என்.எஸ்.எஸ்., முகாமில் கண் மருத்துவ பரிசோதனை
ADDED : ஜன 04, 2024 10:26 PM
கருப்படிதட்டடை:காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம், காஞ்சிபுரம் ஒன்றியம் கருப்படிதட்டடை கிராமத்தில் கடந்த 2ல் துவங்கியது.
இதில், களப்பணியாக கருப்படிதட்டடை மற்றும் பருத்திகுளம் கிராமத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வறிக்கை தயாரித்தல், மரக்கன்று நடுதல், கிராம துாய்மைப் பணி, கருத்தரங்கம் என, நடத்தி வருகின்றனர்.
இதில், மூன்றாவது நாளான நேற்று, கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
இதில், அகர்வால் கண் மருத்துமனையை சேர்ந்த மருத்துவ நிபுணர் குழுவினர், கிராமத்தினருக்கு கண் மருத்துவ பரிசோதனை செய்து, கண் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்.