/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 21ல் நவராத்திரி விழா துவக்கம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் வரும் 21ல் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : செப் 18, 2025 02:11 AM
மாங்காடு:மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா வரும் 21ம் தேதி துவங்கி, அக்., 2 வரை நடக்கிறது. குன்றத்துாரை அடுத்த மாங்காட்டில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா வரும் 21ம் தேதி துவங்கி, அக்.,2 வரை, 12 நாட்கள் நடக்கிறது. விழாவில் தினமும் மீனாட்சி, லட்சுமி, ராஜராஜேஸ்வரி, அன்னபூரணி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, மகிஷாசூரமர்த்தினி மற்றும் சரஸ்வதி அலங்காரம், அம்மனுக்கு சாற்றப்படும்.
காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இசை, நாட்டியம், சொற்பொழிவு, பக்தி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து புரட்டாசி பவுர்ணமி தினமான அக்.,6 மாலை 6:00 மணிக்கு காமாட்சி அம்மன் கோவில் மற்றும் கோவிலின் உபகோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலிலும் இனிப்பு, பலகார வகைகள், காய்கனிகள் மற்றும் தானிய வகைகளால் அலங்காரம் செய்து, நிறைமணி காட்சி விழா நடைபெற உள்ளது.