/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஊட்டச்சத்து விழா
ADDED : செப் 18, 2025 02:15 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.
உத்திரமேரூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா தலைமையில் நேற்று நடந்தது.
சுகாதார நிலைய மருத்துவர் தரணீஸ்வரன் முன்னிலை வகித்தார். அதில், ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும், தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும், ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், சர்க்கரை, உப்பு, எண்ணெய் உபயோகத்தை குறைப்போம். உடல் பருமனை தவிர்ப்போம்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவோம் என்கிற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. சுகாதார நிலைய பணியாளர்கள், அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.