ADDED : ஜன 06, 2024 11:23 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருவண்ணாமலை கிரிவலக் குழு சிவத்தொண்டு நற்பணி மன்றத்தின் 26வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
விழாவை ஒட்டி, வழக்கறுத்தீஸ்வரர் கோவிலிலிருந்து சிவநாத முழக்கத்துடன், சங்க நாதம் மகளிர் கோலாட்டத்துடன் சிவகாமி உடனாய நடராஜ பெருமான், மாணிக்கவாசகர் பல்லக்கில் எழுந்தருளி வீதியுலாவாக சித்தீஸ்வரர் கோவில் வந்தனர்.
தொடர்ந்து சித்தீஸ்வர் கோவிலில் துவங்கிய ஆண்டு விழாவிற்கு திருவண்ணாமலை கிரிவலக் குழுவின் கவுரவ தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.
தெய்வச் சேக்கிழார் அறக்கட்டளை தலைவர் அண்ணா சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். மதியம் 1:00 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடந்தது.
சித்தீஸ்வரர் கோவில் பரம்பரை அறங்காவலர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் வரவேற்றார். கிரிவலக் குழுவின் செயலர் கங்காதரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
புதுச்சேரி மணலிப்பட்டு சுத்தாத்துவித சைவத் திருமட குரு முதல்வர் குமாரசாமி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.