Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/'முட்டுக்காடு மிதவை உணவகம் 15 நாட்களில் பணிகள் முடிக்கப்படும்'

'முட்டுக்காடு மிதவை உணவகம் 15 நாட்களில் பணிகள் முடிக்கப்படும்'

'முட்டுக்காடு மிதவை உணவகம் 15 நாட்களில் பணிகள் முடிக்கப்படும்'

'முட்டுக்காடு மிதவை உணவகம் 15 நாட்களில் பணிகள் முடிக்கப்படும்'

ADDED : ஜன 23, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர் : சென்னை அருகே திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடில் நீர் விளையாட்டு மையமாக படகு குழாம் உள்ளது. இது, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் இயக்கப்படுகிறது.

இதில், விசைப்படகுகள், துடுப்பு படகுகள், வேக படகுகள் என, 30க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. வார விடுமுறை, கோடை விடுமுறை நாளில், இங்கு பொழுது போக்குவதற்காக ஏராளமானோர் வருகின்றனர்.

மேலும், சுற்றுலா பயணியர் வருகையை அதிகரிக்கும் நோக்கில், படகு குழாமில், 5 கோடி ரூபாய் மதிப்பில், 125 அடி நீளம், 25 அடி அகலத்தில், இரண்டு அடுக்கு மிதவை உணவக கப்பல் தயாரிக்கப்படுகிறது.

இதில், தரை தளம் முழுதும் குளிர்சாதன வசதியும், முதல்தளம் திறந்த வெளியாகவும், சமையலறை, சேமிப்பு அறை, கழிப்பறை மற்றும் இயந்திர அறையுடன் கப்பல் வடிவமைக்கப்படுகிறது.

இந்த கப்பல், தமிழகசுற்றுலா வளர்ச்சிக்கழகம், கொச்சியைச் சேர்ந்த 'கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் சார்பில், தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் உருவாகிறது.

கடந்த ஆறு மாதங்களாக, இதற்கான கட்டுமானப்பணிகள் படகு குழாம் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 75 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் 15 நாட்களில், அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படும் என, சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us