/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இடிந்து விழும் நிலையில் மண்டபம் மாநகராட்சி சீரமைக்க வலியுறுத்தல் இடிந்து விழும் நிலையில் மண்டபம் மாநகராட்சி சீரமைக்க வலியுறுத்தல்
இடிந்து விழும் நிலையில் மண்டபம் மாநகராட்சி சீரமைக்க வலியுறுத்தல்
இடிந்து விழும் நிலையில் மண்டபம் மாநகராட்சி சீரமைக்க வலியுறுத்தல்
இடிந்து விழும் நிலையில் மண்டபம் மாநகராட்சி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 10, 2025 03:11 AM

காஞ்சிபுரம்:செடிகள் வளர்ந்துள்ளதால், இடிந்து விழும் நிலையில் உள்ள காஞ்சிபுரம் தாயார் குளம் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என,வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் உள்ள தாயார் குளம் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இக்குளக்கரையில், பொதுமக்களுக்கு நீத்தார் வழிபாடு, மாதாந்திர அமாவாசை, மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குளக்கரையில் தெற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் வளர்ந்துள்ள செடியால், மண்டபத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளது. நாளடைவில் மண்டபம் முற்றிலும் இடிந்து விழும் நிலை உள்ளது.
எனவே, தாயார் குளக்கரை மண்டபத்தில் வளர்ந்துள்ள செடியை அகற்றி, மண்டபத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.