/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய் பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
பராமரிப்பு இல்லாத மழைநீர் வடிகால்வாய்
ADDED : மே 21, 2025 12:41 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேல்பொடவூர் காலனியில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 26 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கு எதிரே மழைநீர் வடிகால்வாய் உள்ளது.
இந்த கால்வாயில், அப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. அதனால், தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளது.
இந்நிலையில், இக்கால்வாய் முறையான பராமரிப்பின்மையால், அதில் கழிவுநீர்தேங்கி செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துபகல் நேரங்களிலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு தொந்தரவு ஏற்படும் வண்ணம்உள்ளது.
மேலும், மழைக்காலங்களில் இக்கால்வாய் பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி விடுவதால், குழந்தைகளை அச்சமயம் கவனமாக கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இந்த கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் அமைத்து, கால்வாய்க்கு மூடி ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.