/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரசக்தி விநாயகர் கோவிலில் வரும் 28ல் கும்பாபிஷேகம் வரசக்தி விநாயகர் கோவிலில் வரும் 28ல் கும்பாபிஷேகம்
வரசக்தி விநாயகர் கோவிலில் வரும் 28ல் கும்பாபிஷேகம்
வரசக்தி விநாயகர் கோவிலில் வரும் 28ல் கும்பாபிஷேகம்
வரசக்தி விநாயகர் கோவிலில் வரும் 28ல் கும்பாபிஷேகம்
ADDED : மே 21, 2025 07:58 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, கோபால்சாமி தோட்டம், ஐதர்பட்டரை தெருவில், வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த தெருவாசிகள், திருப்பணி விழாக் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 26ம் தேதி, காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. மறுநாள் 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
வரும் 28ம் தேதி, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடும், தொடர்ந்து, கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்படுகிறது.
தொடர்ந்து மூலவருக்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு விநாயகர் வீதியுலா நடைபெறுகிறது.