/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி முகாம் துவக்கம் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி முகாம் துவக்கம்
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி முகாம் துவக்கம்
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி முகாம் துவக்கம்
தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி முகாம் துவக்கம்
ADDED : மே 21, 2025 08:01 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் துறை சார்பில், நடப்பாண்டிற்கான ஜமாபந்தி முகாம் இம்மாதம் 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, ஜமாபந்தி முகாம் நேற்று துவங்கியது.
வருவாய் துறை கணக்கீடுகள், பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மீதும் இந்த ஆய்வு செய்யப்ப்படும். ஒவ்வொரு தாலுகாவிற்கும், வருவாய் தீர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், பொதுமக்கள், வருவாய் துறை சம்பந்தமான மனுக்களை அளிக்கின்றனர்.
காஞ்சிபுரம் தாலுகாவிற்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜியும், உத்திரமேரூர் தாலுகாவிற்கு, கலெக்டர் கலைச்செல்வியும், வாலாஜாபாத்திற்கு காஞ்சிபுரம் சப் - கலெக்டர் ஆஷிக் அலியும், ஸ்ரீபெரும்புதுாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசும், குன்றத்துார் தாலுகாவிற்கு ஸ்ரீபெரும்புதுார் சப் - கலெக்டர் மிருணாளியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் தாலுகாவில் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், வாலாஜாபாத் தாலுகாவில் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் ஜமாபந்தி முகாமில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, முகாமை துவக்கி வைத்தனர்.