/புகார் பெட்டி /காஞ்சிபுரம்/காஞ்சிபுரம்:புகார் பெட்டி;அகலம் குறைவாக சாலை அமைப்புகாஞ்சிபுரம்:புகார் பெட்டி;அகலம் குறைவாக சாலை அமைப்பு
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;அகலம் குறைவாக சாலை அமைப்பு
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;அகலம் குறைவாக சாலை அமைப்பு
காஞ்சிபுரம்:புகார் பெட்டி;அகலம் குறைவாக சாலை அமைப்பு
ADDED : ஜூன் 19, 2024 11:51 PM

அகலம் குறைவாக சாலை அமைப்பு
காஞ்சிபுரம், செவிலிமேடு மிலிட்டரி சாலை மேட்டு காலனியில் இருந்து, பிருந்தாவன் நகர் மாரியம்மன் கோவில் தெருவிற்கு சாலை உள்ளது. சமீபத்தில் இந்த சாலை இணைப்பு பகுதியில் புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது.
ஏற்கனவே போடப்பட்டு இருந்த சாலையின் அகலத்தைவிட, ஒன்றரை அடி அகலம் குறைவாக போடப்பட்டுள்ளது. இதனால், இரு கனரக வாகனம் செல்லும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் உள்ளது.
இதனால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஏற்கனவே இருந்த சாலையின் அகலத்திற்கு விடுபட்ட பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும்.
- சி.மணிகண்டன்,
காஞ்சிபுரம்.