/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த காஞ்சி கோட்டாட்சியர்அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த காஞ்சி கோட்டாட்சியர்
அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த காஞ்சி கோட்டாட்சியர்
அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த காஞ்சி கோட்டாட்சியர்
அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த காஞ்சி கோட்டாட்சியர்
ADDED : பிப் 23, 2024 11:47 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக கலைவாணி என்பவர் சமீபத்தில் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி தும்பவனம் தொடக்கப் பள்ளியில், தன் இரு பிள்ளைகளையும் நேற்று சேர்க்க முடிவு செய்தார்.
அதன்படி, தன் இரு பிள்ளைகளுடன், நேற்று காலை பள்ளிக்கு வந்த கோட்டாட்சியர் கலைவாணி, மகள் பிராத்தனாவை மூன்றாம் வகுப்பிலும், மகன் சாய்பிரணவை முதல் வகுப்பிலும் சேர்க்க, தலைமையாசிரியர் மலர்கொடியிடம் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார்.
பள்ளியில் சேர்க்கப்பட்ட கோட்டாட்சியரின் பிள்ளைகள், காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் உணவு அருந்தினர். இதைத் தொடர்ந்து, இறை வணக்க கூட்டத்தில் பங்கேற்ற பின் வகுப்பறைக்கு சென்றனர். இறை வணக்க கூட்டத்தில் கோட்டாட்சியர் கலைவாணி பேசுகையில், ''அரசு பள்ளியில் தான் நானும் படித்தேன்.
''அதன் காரணமாகவே, தற்போது அரசு அதிகாரியாக பொறுப்பேற்று உள்ளேன். மேலும், தாய்க்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் உள்ளதால், அவர்கள் சொல்படி நடக்க வேண்டும்,'' என்றார்.
காஞ்சிபுரத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், கோட்டாட்சியர் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.