பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து: "நோ" சொல்லிவிட்டது மத்திய அரசு
பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து: "நோ" சொல்லிவிட்டது மத்திய அரசு
பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து: "நோ" சொல்லிவிட்டது மத்திய அரசு
ADDED : ஜூலை 22, 2024 04:24 PM

புதுடில்லி: பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்க, பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், முதல்வர் நிதீஷ் குமாரின் ஆதரவு, அக்கட்சிக்கு தவிர்க்க முடியாதது. இதன்படி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற பழைய கோரிக்கையை, அக்கட்சி மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து, லோக்சபாவில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியதாவது: பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவற்கான முகாந்திரம் இல்லை. கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட மாநிலங்களின் பல அம்சங்கள் கருத்தில் கொண்டு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. கரடுமுரடான மலைப்பகுதி, எல்லைப்புற மாநிலம் போன்ற காரணத்தால் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
2012ல் பல்துறை அமைச்சர்கள் குழு அளித்த அறிக்கையை மேற்கோள்காட்டி, பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.